Vidiyalukku Illai Thooram

Vidiyalukku Illai Thooram

Mukil Dinakaran

0

0
eBook
Downloads10 Downloads
TamilTamil
NovelNovel
FamilyFamily
PageeBook: 125 pages

About Vidiyalukku Illai Thooram

“ஸ்ரீவத்ஸா அப்பார்ட்மெண்ட்”டின் மனமகிழ் மன்ற விழாவிற்கு தலைமை தாங்க சென்றிருந்த ஜட்ஜ் சிவஞானம், பணக்காரக் குடும்பங்கள் வாழும் அந்த அப்பார்ட்மெண்டின் பணக்காரக் குழந்தைகள் நிகழ்த்திய பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனார். அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கினார்.

இறுதியாய் அந்த அப்பார்ட்மெண்டின் வாட்ச்மேன் சாரங்கன் தன் பேத்தியின் நிகழ்ச்சியை அந்த மேடையில் நிகழ்த்த சிரமப்பட்டு அனுமதி பெறுகிறார்.

பணக்காரக் குழந்தைகள், பெரிய பெரிய வித்தகர்களின் பயிற்சியின் உதவியால் செய்த அத்தனை பர்ஃபாமென்ஸையும் சர்வ சாதாரணமாய் ஒரே நிகழ்ச்சியாய் அச்சிறுமி செய்து விட, தனிப்பட்ட பரிசினை வழங்குகிறார். குழந்தை தன் தாயை மேடைக்கு அழைக்கிறாள். எழுந்து வந்த அந்த தாய், சிவஞானத்தை அருகில் வந்து பார்த்ததும் அதிரிச்சியாகை அப்படியே திரும்பிச் செல்கிறாள்.

ஜட்ஜ் சிவஞானமும் அவளைக் கண்டு பேரதிர்ச்சியடைகிறார்.

காரணமும், முன் கதையும் நாவலின் சிறப்புக்கள்.

About Mukil Dinakaran:

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.