Thenammai Lakshmanan
தேனம்மைலெக்ஷ்மணன் கவிஞர், எழுத்தாளர், வலைப் பதிவர், சுதந்திரப் பத்ரிக்கையாளர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண்பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம், விடுதலை வேந்தர்கள், பெண் மொழி, காதல் வனம், மஞ்சளும் குங்குமமும், பெண் அறம், கீரைகள், ஆத்திச்சூடிக் கதைகள், பெண்ணின் மரபு, நன்னெறிக் கதைகள் இரண்டு தொகுதிகள், வளையாபதி & குண்டலகேசி மூலமும் உரையும், நாககுமார காவியம்-புதினம், நீலகேசி-புதினம் , ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், கோலங்கள், மகாபாரதக் கிளைக் கதைகள், சாணக்ய நீதி-உரை, சோகி சிவா, செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள், இப்படியும் சாதிக்கலாம், கருப்பை நம் உயிர்ப்பை ஆகிய 27 நூல்களின் ஆசிரியர். புஸ்தகாவில் 12 நூல்களும் அமேஸானில் 49 நூல்களும் வெளியாகி உள்ளன.
நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இந்திய ஆசிய கவிஞர்கள் மாநாட்டில் தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் என்ற நூல் வெளியாகி உள்ளது. அழகப்பா பல்கலை வெளியிட்ட கருத்தரங்க நூலில் 20 ஆம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலையின் தொலைதூரப் பாடத்திட்டத்தில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது.
குங்குமம், குங்குமம் தோழி, குமுதம், குமுதம் பக்தி ஸ்பெஷல், குமுதம் ஹெல்த் ப்ளஸ், ஆனந்தவிகடன், அவள் விகடன், கல்கி, இந்தியா டுடே, தேவதை, மல்லிகை மகள், மெல்லினம், லேடீஸ் ஸ்பெஷல், பாக்யா, பூவரசி, சமுதாய நண்பன், நம் தோழி, சூரியக்கதிர், இவள் புதியவள், தினமலர், தினமணி, தினமணிக் கதிர், பெண்கள் ராஜ்ஜியம், புதிய தரிசனம், பரிவு, குறுஞ்செய்தி, தினகரன் வசந்தம், புதிய தலைமுறை, யுகமாயினி, இன் & அவுட் சென்னை, சென்னை அவென்யூ, கொளத்தூர் டைம்ஸ், ஆச்சி வந்தாச்சு, புதிய பயணி, ஹாலிடே நியூஸ், நமது மண்வாசம், கோகுலம், ஷெனாய் நகர் டைம்ஸ், தமிழ்த்தேர், மங்கையர்மலர், ஐபிசிஎன், மகளிர் தரிசனம், தென்றல், நமது செட்டிநாடு, தனவணிகன் ஆகிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி வருகின்றன.
இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல்,வாசகசாலை ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார்.
நம் உரத்த சிந்தனை, தீக்கதிர், லேடீஸ் ஸ்பெஷல், தினமலர், தினமணி, இந்தியா டுடே, தி தமிழ் இந்து, புதிய தரிசனம், தென்றல், புன்னகை உலகம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவற்றில் இவர் பற்றியும் இவரது நூல் பற்றியும் வெளியாகி உள்ளன.. சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட் மற்றும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி, விஜய் டிவி , சன் நியூஸ் தொலைக்காட்சி, புதிய யுகம், வானவில், பொதிகை தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் இவரது கருத்து & பேட்டி வெளியாகி உள்ளது. பத்து நூல்களுக்கு முன்னுரை வழங்கியுள்ளார்.
இவருடைய கவிதைகள் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மலாயிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சகி என்ற கன்னடப் பத்ரிக்கையில் இவரது கவிதையின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. அன்ன பட்சி நூலுக்காக ”அரிமாசக்தி” விருது பெற்றவர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் போட்டியில் இருமுறையும் சிறுகதைப் போட்டியில் ஒரு முறையும் பரிசு பெற்றவர். வலைப்பூ எழுத்துக்களுக்காக 25 விருதுகளும், சமூக இணையப் பங்களிப்புக்காக சிறப்பு விருதும், மதர் தெரசா அவார்டு, விமன் எம்பவர்மெண்ட் அவார்டு, கம்யூனிட்டி சர்வீஸ் அவார்டு பெற்றவர். தினமணி சிறுகதைப் போட்டியில் மூன்று முறை ஊக்கப் பரிசு மற்றும் சிவப்புப் பட்டுக்கயிறு என்ற சிறுகதை நூலுக்காகவும், சோகி சிவா என்ற நாவலுக்காகவும், மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள் சிறுகதை நூலுக்காகவும் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு பெற்றவர்.
அவள் விகடனின் வலைப்பூவரசி, குங்குமம் தோழியின் ஸ்டார் தோழி, திருநெல்வேலி தூத்துக்குடி எஃப் எம்மின் சிறந்த பெண் வலைப்பதிவர், ஈரோடு சங்கமத்தில் சிறந்த பெண் வலைப்பதிவர், பாக்யாவில் எதிரொலி நாயகியாக, நம் உரத்த சிந்தனையில் இணையதள ப்ளாகர், திருப்பூர் அரிமா சங்கத்தின் அரிமா சக்தி விருது, தமிழால் இணைவோம் தந்த தங்கமங்கை விருது, லேடீஸ் ஸ்பெஷலின் ஸ்பெஷல் லேடி விருது, ஸ்ரீ சக்தி விருது, விஞ்ஞானி ரகுபதி விருது, தமுஎகசவின் நற்றமிழ் நங்கை விருது பெற்றிருக்கிறார்.