G. Kalayarassy
என் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.
வாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.
உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
என் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இருமுறை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.
என் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம்.