Puvana Chandrashekaran
காதல் திருமணம் செய்துகொண்டு உற்சாகமாக வாழ்க்கையை ஆரம்பிக்கும் தம்பதியின் வாழ்க்கையில் புயலாக வீசி நிம்மதியைக் குலைக்கிறது ஒரு நிகழ்வு. கணவனை விவாகரத்து செய்யத் துணியும் மனைவி. அதன் பின்னே இருந்த காரணம் என்ன? மனக்கசப்பு தீர்ந்ததா இல்லையா என்று தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
எனது பெயர் புவனா சந்திரசேகரன். விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்ட வங்கி ஊழியர். கடந்த நாலரை ஆண்டுகளாக, கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், புதினங்கள் எழுதி வருகிறேன். என்னுடைய பல படைப்புகள், போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கின்றன.
புதிய கதைக் களங்களை எடுத்துக் கொண்டு எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இதுவரை என்னுடைய ஒன்பது நாவல்கள் அச்சில் வெளிவந்துள்ளன. பல கதைகள் புஸ்தகாவிலும் கிடைக்கின்றன. சிறுவர் மின்னிதழ் ஒன்றின் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறேன். நாற்பது வருட தில்லி வாழ்க்கைக்குப் பிறகு தற்போது மதுரையில் வசிக்கிறேன். வாசகர்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன். நன்றி.